சேலம் சிறை வளாகத்தில் நெல்லை கண்ணன் குடும்பத்தினருன் இராமசுகந்தன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு

சேலம்:

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லைக் கண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடியாரின் மூத்த மகனுமான  வாழப்பாடி இராம.சுகந்தன் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கள், அங்கு சேலம் கண்ணனின் குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.

நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் முன்னாள் பேச்சாளரும், இலக்கிய பேச்சாளருமான  நெல்லை கண்ணன் கலந்துகொண்டார். அப்போது, மோடி அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து நெல்லை போலீசார் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேச துரோக வழக்கில் கைது செய்தனர். அவரை 13 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சேலம் சிறை வளாகத்தில் நெல்லை கண்ணன் குடும்பத்தினருன் இராமசுகந்தன் உள்பட சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள  இராமசுகந்தன்,  சேலம் மத்திய சிறையில் இருக்கும் திரு நெல்லை கண்ணன் அவர்களை , தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தான் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றதாகவும், ஆனால், சிறை விதிகளுக்குட்பட்டு இன்று மூன்று நபர்கள் மட்டுமே நெல்லை கண்ணனை சிறையில் சந்திக்க முடியும் என்று கூறியதால், நெல்லை கண்ணனை சந்திக்க வந்திருந்த அவரது குடும்பத்தினர் மட்டுமே சந்தித்து வந்தனர்.

அப்போது, நெல்லை கண்ணனின் மகன்  திரு சுரேஷ்-ஐ சந்தித்து நெல்லை கண்ணன் குறித்து விசாரித்தோம், அவர் , நெல்லை கண்ணன் உற்சாகத்தோடு இருப்பதாக கூறினார் என்று தெரிவித்து உள்ளார்.