கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கொரோனா உறுதியாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கர்நாடகாவின் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சோதனையில் சிவகுமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். முன்னதாக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.