பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்க போலீஸ் தீவிரம்….

செங்கல்பட்டு:

பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்கும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடியினரைச் சேர்ந்த 45 பேர், இந்த மோசடியில் சிக்கி தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 45 நபர்கள் மோசடி செய்த நபரிடம், பல ஆண்டுகளாக சேமித்த 1,28,000 ரூபாயை இழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாயை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிவாரண வழங்க உள்ளதாக, சின்னேரி கிராமத்தில் வசிப்பவரும், பெண்களின் சுய உதவிக்குழுவின் உறுப்பினருமான ராணி என்பவருக்கு ஒருவர் போன் செய்துள்ளார். மேலும் தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வழங்கும் கொரோனா நிவாரண தொகையை அனுப்ப, உங்களது டெபிட் கார்டு தகவல்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பி, தனது டெபிட் கார்டு விவரங்களையும் சி.வி.வி எண்ணையும் அவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அந்த பெண்மனி.

நேற்று காலை 6 மணியளவில் தொடங்கிய அழைப்பு காலை 11.30 மணி வரை நீடித்தது, ஏனெனில் ராணி தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களை அழைத்து அந்த நபருடன் பேச வைத்துள்ளார். அந்த நபர் சிலரிசம் இருந்து ஒன் டைம் கடவுச்சொற்கள் (OTP கள்) உட்பட அனைத்து விவரங்களையும் அவர் சேகரித்தார் கொண்டுள்ளார்.

இவர்கள் தகவல்களை கொடுத்த உடன், அவர்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்ததற்கான எஸ் எம் எஸ் வந்துள்ளது. பழங்குடியின மக்களான அவர்கள், ஆங்கிலத்தில் வந்த எஸ் எம் எஸ்-ஐ படிக்க தெரியாமல் அந்த நபர் கூறியது போன்று மத்திய அரசின் நிவாரண தொகை வந்ததாகவே நினைத்து கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரி செல்வம், இந்த மெசேஜ்-ஜை பார்த்து படித்து கூறிய பின்னரே அந்த 45 பேரும், தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டனர்.

இதையடுத்து பழங்குடியின மக்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து 45 பேரை ஏமாற்றிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

கார்ட்டூன் கேலரி