சென்னை:  தமிழக்ததில் இணையவழி பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட் டுள்ள,  ‘தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020’-ஐ முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.  மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை பலப்படுத்தும் வகையில் இந்த கொள்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் ‘கனெக்ட் 2020’ என்ற மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

 அப்போது, தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறைகளில் தமிழகம் முன்னிலை வகித்து வருவதாகவும்,  அரசுத் துறைகள் மக்களுக்கான அரசின் சேவை களை இணையவழியில் அளித்து வரும் நிலையில், அச்சேவைகள் மற்றும் அவை சார்ந்த தகவல் உட்கட்டமைப்புகளை இணையவழி ஊடுருவல் மற்றும் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க மாநிலத்திற்கான இணையப் பாதுகாப்பு கொள்கையை வரையறுப்பது இன்றியமையாதது.

அதன்படி தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பினை உறுதிசெய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுக்கவும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் .

இதேபோல் அரசுத் துறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020, வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு இணைய பாதுகாப்புக் கொள்கை 2020,   தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.