முருகப்பெருமானுக்கும் ஆறு என்னும் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.  ஆறு குழந்தையாக பிறந்த முருகன் ஆறு கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவர்.   பின் சக்தியால் சேர்த்து எடுக்கப்பட்டதும் ஆறு முகங்களுடனும் ஆறு ஜோடி கரங்களுடனும் உரு எடுத்தவர்.   அவரை துதிக்கும் மந்திரமான சரவண பவ என்பது மொத்தம் ஆறு எழுத்து.    அவர் சூர சம்ஹாரம் செய்த திதி சஷ்டி திதி.   இது அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இருந்து ஆறாம் நாள்.

கந்தனின் மந்திரமான ஸரவணபவ என்பதின்பொருள் என்ன தெரியுமா?

ஸ – லட்சுமி கடாட்சம்

ர – சரஸ்வதி கடாட்சம்

வ – போகம் – மோட்சம்

ண – சத்துரு சம்காரம் (எதிரிகள் அழிவு)

ப – மிருத்யு ஜயம் (நண்பர்கள் வெற்றி)

வ – நோயற்ற வாழ்வு

ஆகியவைகளை அருள முருகப் பெருமானை வேண்டுவதே ஆகும்

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என பழமொழி உண்டு.  ஒவ்வொரு மலையில் முருகன் கோயில் உண்டு.  ஆனால்  முருகன் தலங்களில் முக்கியமாக சொல்லப்படுவது ஆறு படை வீடுகள்.  அதுவும் ஆறு தான்.   இந்த ஆறு படை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக உள்ளன

திருப்பரங்குன்றம் – மூலாதாரம்

திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்

பழனி – மணி பூரகம்

சுவாமி மலை – அனாஹதம்

திருத்தணிகை – விசுத்தி

பழமுதிர்ச்சோலை – ஆக்ஞை

அது மட்டும் அல்ல.  முருகனுக்கு பல பெயர்கள் இருந்தாலும் முக்கியமான பெயர்கள் ஆறு

முருகன்

கந்தன்

சரவணன்

கார்த்திகேயன்

சுப்ரமணியன்

ஆறுமுகன்

இவ்வாறு முருகனுக்கும் ஆறு என்னும் எண்ணுக்கும் பல பொருத்தங்கள் காணப்படுகின்றன.