மகாதிர் முகமதுவுக்கு ஆதரவளிப்பதற்கான எம்பி க்கள் கூட்டம் – சுமுகமாக நிறைவு!

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக கூட்டப்பட்ட அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்து கூட்டம் சுமூகமாக நிறைவடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரவு விருந்தில் மொத்தம் 131 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு பிரிவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 ஆதரவாளர்களும், மகாதிர் முகமதுவுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்க அங்கே கூடியிருந்தனர்.

ஷெரட்டன் ஹோட்டலின் விருந்து அறைக்குள் நடைபெற்ற விஷயங்கள் சுமுகமாக முடிவடைந்ததாகவும், அனைவரும் மகிழ்ச்சியான முறையில், ஆதரவளிக்கும் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்றும் கூறப்படுகிறது.

PPBM, PKR, Warisan, GPS, Umno மற்றும் PAS ஆகிய 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.