சென்னை:

ணவுப் பொருட்களில் ருசிக்காக சேர்க்கப்படும்  அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்யக்கோரி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, அதை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.  தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் அஜினோமோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்  என்று அமைச்சர் கருப்பண்ணன் உறுதியளித்தார்.

அஜினோமோட்டோ:

நகரவாசிகள் ருசிக்காக தங்களது உணவுகளில் அஜினோமோட்டோ எனப்படும் ஒருவகையான உப்பை சேர்ப்பதை வழக்கமாகி வருகின்றனர். இந்த அஜினோமோட்டோ எனப்படும் ஒருவகையான ரசாயண உப்பை தமிழகத்தில் உள்ள உணவு விடுதிகள், குறிப்பாக சாலையோர உணவு விடுதிகள், துரித உணவகங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருருகின்றன.

பொதுவாக ஒருவர்  தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோ மோட்டோ கலந்த உணவை உண்டால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. ஆனால், ருசிக்காக அதிக அளவு அஜினோமோட்டோ என்ற ரசாயண உப்பு சோர்க்கப்படுவதால், சமீப காலமாக விதவிதமான புதிய நோய்கள் பரவி வருகின்றன.

முதியோர்களுக்கு  தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் மட்டுமின்றி வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு போன்ற நோய்களும் நாளடைவில் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

பொதுமக்களே ருசிக்காக நீங்கள் உணவில் சேர்க்கும் அஜினோமோட்டோவால் பாதிக்கப்படுவது நீங்கள்தான்… எச்சரிக்கை…