திருப்பதியில் குண்டு வெடிப்புக்கு சதி?

 

திருப்பதி:

திருப்பதியில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டத்தா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.