எனது ஆட்சியைக் கவிழ்க்க சதி : குமாரசாமி குற்றச்சாட்டு

சன், கர்நாடகா

ர்நாடகா முதல்வர் குமாரசாமி தமது ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவின் குமாராசாமி ஆட்சி புரிந்து வருகிறார்..    இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் வெளியாகின.   நேற்று கர்நாடக முன்னாள் முதல்வ்ர் சித்தராமையா, தாம் மீண்டும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஆதரவுடன் 2 ஆம் முறையாக முதல்வராக உள்ளதாக கூறினார்.

ஹசன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் குமாரசாமியிடம் இது குறித்து கேட்டதற்கு, “எனது ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது.   ஒருவர் வரும் செப்டம்பர் மாதம் ஆட்சி மாற்றம் உண்டாகி அவர் 3 ஆம் தேதி முதல்வராக உள்ளார் என கூறியதை நானும் கேள்விப்பட்டேன்.

உண்மையில் என்ன நடக்கிறது என்றோ இது போல யாரும் பேசுவது குறித்தோ எனக்கு ஒன்றும் தெரியாது.   நான் அதைப்ப்பற்றி கவலைப்பட்வும் இல்லை.  எனக்கு முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை.

நான் இன்னும்  எத்தனை நாள் முதல்வராக இருப்பேன் என எனக்கு தெரியாது.   நான் முதல்வராக உள்ளவரை  மக்களுக்கு சிறப்பான பணியை செய்வதே எனது நோக்கமாகும்.   அதன் மூலமே எனது எதிர்காலத்தை என்னால் காத்துக் கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.