திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது – கங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

சென்னை:
திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது என்று கங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி ஆகியோர்சென்றனா். மு.க.ஸ்டாலினுடன் 40 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் இன்று காலை 10 மணியளவில் கையெழுத்தானது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது என்றார்.