துரை

பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாகும் முன்பே மதுரை தெற்கு தொகுதியில் பாஜக துணைத் தலைவர் மகாலட்சுமி பிரசாரம் தொடங்கி உள்ளார்.

 

வரும் ஏப்ரல் 6 ஆம்  தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி மோதுகின்றன.    கமலஹாசன் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம்  தலைமையில் 3ஆம் அணி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.  திமுக அணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் அதிமுக அணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என முடிவாகவில்லை.   இந்நிலையில் அதிமுக தனது முதற்கட்ட 6 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.   பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.  இந்நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் பாஜக துணைத் தலைவர் தம்மை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஆதரவாளர்களுடன் மகாலட்சுமி மதுரை மேற்கு தொகுதியில் தீவிர பரப்புரையை நடத்தி வருகிறார்.   தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அதிமுகவைச் சேர்ந்த எஸ் எஸ் சரவணன் இம்முறையும் போட்டியிட முடிவு செய்து விருப்ப மனு அளித்துள்ளார். இந்நிலையில் பாஜக இங்குப் பிரசாரம் செய்வது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.