பள்ளி பாடத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம்: சட்டமன்றத்தில் செங்கோட்டையன் தகவல்

சென்னை:

மிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கேள்வி நேரத்தின்போது இன்பதுரை எம்எல்ஏ, தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் அரசியல் அமைப்பு குறித்து பாடம் சேர்க்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு போதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கல்வி  அமைச்சர் செங்கோட்டையன், , 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.  அதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.

மேலும் மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த  அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.