டில்லி

ட்டுமானப் பணிகளுக்கான ஜி எஸ் டி வரி 12%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காம்ப்ளெக்ஸ்கள், அபார்ட்மெண்டுகள், போன்ற எந்த ஒரு கட்டிடமும், விற்பனைக்காக கட்டப்பட்டதென்றால் 18% ஜி எஸ் டி வரி விதிக்கப்படும் என திருத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு கட்டுமானங்களுக்கு மட்டுமே ஆகும்  நிலத்தின் மதிப்பு இதில் சேர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தம் ஏற்படும் முன்பு, எல்லா கட்டிடங்களுக்கும் நிலத்தின் மதிப்பையும் சேர்த்து ஜி எஸ் டி 12% கணக்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.   பில்டர்ஸ் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாறுதல் செய்யப்பட்டுள்ளது.  இதனால் வீட்டின் விலை அதிகரிக்காது என சொல்லப்படுகிறது.