பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

மாதவரம் அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சசிகுமார்,  தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சையது ஜமீம் அன்சாரி ஆகியோர், காலையில் ஒரே பைக்கில், வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கன்டெய்னர் லாரி ஒன்று மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் காவல்துறையினர், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், லாரி டிரைவர் சர்தார் என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி