சென்னையில் இயல்பு நிலைக்குத் திரும்பும் கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னை: தமிழக தலைநகரில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக, கடும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 9 தெருக்கள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 28 நாட்களாக, அப்பகுதிகளில் எந்தப் புதிய கொரோனா தொற்று நோயாளியும் கண்டறியப்படாத காரணத்தால், இந்த நிலை திரும்புவதாக கூறப்படுகிறது.

அந்த தெருக்கள் எவை எவை?

* பார்த்தசாரதி மெயின் தொரு, 2,5 மற்றும் 6 தெரு, மற்றும் ஜமால் – கடந்த ஏப்ரல் 9ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* நாவல் ஹாஸ்பிடல் ரோடு, 8வது தெரு – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* ஓவ்லியா சாஹிப் தெரு – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* பார்டர் தோட்டம் – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* சச்சிதானந்தன் தெரு, கொசப்பேட்டை – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* பாலாஜி நகர் 7வது தெரு – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* அங்கமுத்து சாலை – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* விஜிபி சாலை, சைதாப்பேட்டை – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது

* கிருஷ்ணா நகர், பாலவாக்கம் – கடந்த ஏப்ரல் 3ம் தேதி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது