டில்லி:

ச்சநீதி மன்ற தீர்ப்பை திரித்து கூறியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது பாஜக எம்.பி. உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ராகுல்காந்தி. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ரஃபேல்  போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்தியஅரசின் பதிலை தொடர்ந்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் செய்திப்பத்திரிகை ஒன்றில் வெளியாக ரஃபேல விவாரம் மீண்டும் பரபரப்பு அடைந்தது.  இதைத்தொடர்ந்த ரஃபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.

இந்த நிலையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது,  தன்னை நாட்டின் காவலன் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடியை திருடர் என உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டதாக பேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி , ராகுல்காந்தி  உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு மாறாக  கூறி, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ராகுல் தரப்பில் பிரம்மான பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ராகுல் தவறை ஒப்புக்கொள்ளா விட்டால் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  ராகுல் தரப்பில் புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 3 பக்கல் கொண்ட அந்த பத்திரத்தில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக ராகுல் தெரிவித்து உள்ளார்.