சென்னை:

தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக, தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.


நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களின் செல்வோரின் பாதுகாப்பு கருதி, சாலைகளில் டிஜிட்டல் பேனர் வைக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பேனர்களை சாலைகளில் அமைக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அரசு மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் இந்த இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் 19-தி பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னையில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பேனர்களை வைத்தனர்.

இது குறித்து புகார் கொடுத்தும் காவல் துறையினர், மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.