இந்த வருடத்தின் பிக்பாஸ் சீசன் புதிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தினமும் ஒரு நெகிழ்ச்சி சம்பவமோ அல்லது சண்டையோ நடந்துவிடுகிறது.


இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியாக போகிறார் என்று மக்கள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


சனம், ரேகா இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும். வீட்டிலிருந்து ரேகா தான் வெளியேற போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


இதனிடையே இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், எலிமினேட் செய்யப்படுவோரை அறிவிக்க ஸ்டைலான உடையுடன் மேடைக்கு வருகிறார் கமல்ஹாசன்.
மேலும் அகத்தின் அழகு முகத்தில் தெரியாமல் யார் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள் என்றும் போட்டியாளர்களுக்கிடையே டாஸ்க் கொடுக்கப்பட்டு, அகம் டிவி வழியாக அவர்களுடன் உரையாடியுள்ளார் கமல்.