பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக நேற்று குறும்படம் ஒளிபரப்பானது. ஆரி-சம்யுக்தா இடையிலான பிரச்சினை குறித்து பேசிய கமல் அவர் உங்கள் தாய்மை குறித்து பேசவில்லை என்று சொல்லி சிறிய குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டினார்.

கடைசியில் வாக்குகள் எண்ணிக்கையில் சம்யுக்தா வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேறியதாக தகவல்கள் வெளியான நிலையில் சம்யுக்தா வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #samyukta இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறார். அவர் வெளியேறும் போது போட்டியாளர்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைத்தனர். பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் இன்று நாமினேஷனில் பலரும் ரம்யா, ஷிவானி, ஆரி, சனம் ஆகியோருக்கு வோட் செய்வதை பார்க்க முடிகிறது. ஷிவானியை, பாலாவை காரணம் காட்டி நாமினேட் செய்கின்றனர்.