டெல்லி,
தொடரும் கைது சம்பவங்களால் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தங்களது செல்வாக்கை இழந்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாலியல் புகார்கள் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நரேஷ் பால்யன்
நரேஷ் பால்யன்

கடந்த செப்ட்ம்பர் மாதம் மற்றொருடெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான அமானதுல்லா கான் மீது அவரது தம்பி மனைவி கொடுத்த பாலியல் புகாரை அடுத்து ஜாமியா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டார்.
சோம்நாத் பாரதி
சோம்நாத் பாரதி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட சென்ற சோம்நாத் பாரதி அங்கு பாதுகாவலர்களைத் தாக்கி பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தார் என்ற புகாரில் சோம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மனைவியை சரமாரியாகத் தாக்கிய வழக்கில் சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பாரதி மீண்டும் பாதுகாவலர்களை தாக்கியதாக சிறைக்கு போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அமைச்சராக சந்தீப் குமார் 6 பெண்களுடன் இருக்கும் ஆபாச சி.டி. வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது சந்தீப்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த வரிசையில் நரேஷ் பால்யானும் இணைந்துள்ளார். ஆம்ஆத்தி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் இப்படி ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருவது அக்கட்சியினரிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரகாஷ் ஜன்வால்
பிரகாஷ் ஜன்வால்

மனோஜ்குமார்
மனோஜ்குமார்

அமானுல்லாகான்
அமானுல்லாகான்

இதுகுறித்து பேசிய சமூக ஆர்வர், டெல்லியில் திறமையான, நேர்மை யான, ஒழுக்கமான ஆட்சியை தருவார் என்றுதான் மக்கள் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம்ஆத்மியை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கைகள் மோசமாக உள்ளது. அவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவது மக்களிடையே ஆத்ஆத்மி மீது வெறுப்புகள் வளர தொடங்கி உள்ளது.
தினேஷ் மோகனியா
தினேஷ் மோகனியா

கெஜ்ரிவால் சரியான ஆட்களை தேர்ந்தெடுக்கவில்லையோ என்று மக்கள் பேசத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சி ஆட்டம் கட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஆம்ஆத்மி கட்சி உருகுலைந்து போகும் என்றார்.