தொடர் மழை: பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள்!

சென்னை,

மிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள்  விடுத்துள்ளது.

மழை காரணமாக, மின்தடை அல்லது மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னையை பொறுத்தவரை பொதுமக்கள் எளிதில் தங்கள் புகார்களை தெரிவிக்கவும், பாதுகாப்பை கருதியும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்  மேற்கொண்டு வருகிறது.

மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மழைக்காலத்தில் மின்தடை மற்றும் இடையூறுகளை சரிசெய்ய மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.