பச்சை மண்டலமாக தொடர்கிறது… கிருஷ்ணகிரியில் மருத்துவர் குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை…

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர்  உள்பட 11 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆனால், அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடித்து வருகிறது.
விழுப்புரத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்ர்  கிருஷ்ணகிரி  மாவட்டத்தை  சேர்ந்த மருத்துவருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, பெண் மருத்துவரான அவரது  மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்பட 11 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் பெண் மருத்துவர் உட்பட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லாத நிலையில்,  தமிழகத்திலேயே கொரோனா தொற்று பரவாத பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நீடித்து வருகிறது.