லக்னோ: பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து வருகிறது.  உ.பி.யில் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 19வயது தலிம் இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த14 ஆம் தேதி  ( செப்டம்பர்0 உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 19 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல், தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இதுகுறித்து, அந்த பெண் வெளியே சொல்லாம் இருக்க, அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூர கும்பல் வெட்டியுள்ளது. மேலும், அந்த பெண்ணை கடுமையாக தாக்கி எலும்புமுறிவுகளையும் ஏற்படுத்தி உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண், முதல்கட்டகமானக  ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆனால்,  சிகிச்சை பலனளிக்காமல் அவர்  நேற்று உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பு அந்தப் பெண் போலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, 4 இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இறந்த பெண்ணின் பெற்றோர், தனது பெண்ணின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன்,  உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக,   காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.