சென்னை:

மிழகத்தில் இன்று 2வது நாளாக  கேஸ் டாங்கர் லாரி ஸ்டிரைக் தொடர்ந்து வருவதால், நாடு முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லாரி வாடகை டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து,  தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியது. இன்று 2வது நாளாகவும் லாரிகள் இயங்காததால், வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் கேஸ் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கேஸ் டாங்கர் லாரி ஸ்டிரைக்  தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக   த்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை மொத்தமாக டேங்கர்களில் எடுத்து சென்று நாடு முழுவதும் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்மண்டல எல்பிஜி லாரி உமையாளர்களுக்கு ஆதரவாக கிழக்கு மண்டல எல்.பி.ஜி டாங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதன் காரணமாக மேற்கு வங்கம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தென் மண்டல  எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூறும்போது, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணை நிறுவனங்கள், ஏற்கனவே டாங்கர் லாரி மூலம் காஸ் கொண்டு செல்ல மண்டலம் வாரியாக டெண்டர் கோரி வந்தனர். தற்போது அதை ரத்து செய்துள்ளனர்.

இதன் காரணமாக, மீண்டும்  மண்டலம் வாரியாக டெண்டரை அமல்படுத்த கோரி  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக ஒரு நாளைக்கு ரூ.2 கோடி அளவுக்கு லாரி உரிமையாளர்களுக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

டாங்கர் லாரி ஸ்டிரைக் மேலும் தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக எண்ணை நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.