சென்னை:  சென்னை அருகே உள்ள காங்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள சென்னை எஸ்ஆர்எம் கல்லுரிகளில் படித்து வரும் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ந்தை மரணத்தால் மனம் உடைந்து பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அந்த பகுதி காவல்துறையினர் கூறி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர்  இந்து (27). செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துவிட்டு தற்போது மருத்துவ  மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வருவதுடன், அங்குள்ள பல் மருத்துவமனை கல்லூரியில் டாக்டராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று காலை விடுதி அறையில் இருந்து நீண்ட நேரமாக  வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அங்கிருந்த ஊழியர்கள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, அங்குள்ள மின்விசிறியில், இந்து தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையின், இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11ம் தேதி மாரடைபால் இறந்தார். இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றார்.

எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆண்டுதோறும் பலர் தற்கொலை செய்துகொள்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. 2019-20ம் நிதியாண்டில் மட்டும் எஸ்.ஆர்.எம்  கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2 மாதங்களில் 3 தற்கொலை சம்பவங்கள் நடந்தேறிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கு நடைபெற்று வரும் தற்கொலைகள் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி வருகிறது. நிர்வாகத்தை எதிர்ப்பவர்களே தற்கொலை செய்துகொள்வ தாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாணவர்கள் தரப்பில்  ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே இருந்து வருகிறது. புகார் கொடுப்பவர்கள், கல்லூரியை விட்டு நீக்கப்படுவதும், மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள டிஜிபி திரிபாதி, கடந்த ஆண்டு (202) ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தார். ஆனால், விசாரணை முடிவுகள் என்ன என்பது குறித்து இதுவரைவெளியிடப்படவில்லை.

தொடரும் தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள்  தயங்கி வருவது விந்தையாகவும் உள்ளது.