அறந்தாங்கி,

றந்தாங்கி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக பலியானார். அவரது மாடும் பலியானது. அவரது  மனைவி படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

சமீபத்தில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலியானது அனைவரும் அறிந்ததே. அதைத்தொடர்ந்து தமிழக மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். மேலும், மின்சாரம் காணமாக யாராவது பாதிக்கப்பட்டால் தானே பொறுப்பு என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,  அறந்தாங்கி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை அறியாமல் மிதித்த முதியவரான விவசாயி பாலையா மற்றும் அவரது மாடும் பலியானது. அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

கடும் மழை காரணமாக அவரது வீட்டுக்கு பின்புறம் செல்லும் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை அறியால், வழக்கம்போல் தனது மாட்டை ஓட்டிக்கொண்டு வயலுக்கு செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக  அறுந்து கிடந்தத மின் கம்பி மீது  அதை அவர் மிதித்துவிட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். மின்சாரம் தாக்கி அவரின் மாடும் இறந்துவிட்டது.

மின்சாரம் தாக்கியதில் பாலையாவின் மனைவி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்த விவசாயி அறந்தாங்கி அருகே உள்ள அந்தோணி பகுதியை சேர்ந்தவர் பாலையா என்பது தெரிய வந்துள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.