பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக,  கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் வினாடிக்கு  2500 கன அடியாக அதிகக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதி மன்றம் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மைஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு  உத்தரவிட்டும் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசு, தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

தொடக்கத்தில்,  கபினி அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 355 கனஅடி தண்ணீர் என 855 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.  தற்போது விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விநாடிக்கு 2000 கன அடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அறிவித்து உள்ளது.

.