தொடர் குறுக்கீடு: சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ. வெளியேற்றம்

சென்னை:

பையில் முதல்வர் பேசும்போது, விதியைமீறி தொடர்ந்து குறுக்கீடு செய்து வந்தாக, திமுக எம்எல்ஏ ஆஸ்டின், சபையில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார்.  இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

தமிழக அரசின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்.17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் அமர்வின் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள்  தொடர்பாக மார்ச் 9 ஆம் தேதி முதல் அவை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்றைய சபை விவாதங்களின்போது, முதல்வர் பேசும்போது, தொடர்ந்து குறுக்கிட்டு பேசி அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேரவையில் இருந்து வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இன்றைய கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.