தொடர் மழை: அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை:

ன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கி உள்ளது.

நேற்று மாலை துவங்கிய மழை இடிமின்னலுடன் விடியவிடிய இப்போதுவரை பெய்துவருகிறது.

இதனால் சென்னை நகர சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், கார், ஆட்டோ போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

நேற்று இரவு தேர்வு  திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்த நிலையில், மழை தொடர்ந்து பெய்வதன் காரணமாக, அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி