ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

--

சென்னை:

மிழக கல்விக்கூடங்களில் நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த ஆண்டு 10வது வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக கூறப்பபட்டது.

பாடத்திற்கு தகுந்தவாறு சிறப்பு ஆசிரியர்கள் இல்லாததால் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக மாணவ மாணவிகள் மேல்நிலைக் கல்விக்கு தனியார் பள்ளிகளைச் நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதியதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் இந்த கல்வி ஆண்டு தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படு வார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

அதன்படி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதன்படி  6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1,474 தற்காலிக முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.