சட்டமன்ற & நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முரண்பாடுகள்

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், தமிழக அளவில் பதிவான வாக்குகளில் பல ஆச்சர்ய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை கவனிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளுக்கு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தவிர இதர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

ஆனாலும், அப்படி வென்ற மக்களவைத் தொகுதிகளில் உள்ளடங்கும் சில சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக வென்றுள்ளது.

விளாத்திக்குளம், சாத்தூர், மானாமதுரை, பரமக்குடி, சோளிங்கர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, சூலூர் மற்றும் நிலக்கோட்டை ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை அதிமுக வென்றது. ஆனால், இந்த சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

அதேசமயம், அதிமுக வென்ற ஒரேயொரு மக்களவைத் தொகுதியான தேனி ‍தொகுதியில் உள்ளடங்கிய பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி