புலம்பெயர்ந்த தொழிலாளர் ரயில் பயணத்திற்கு காங். தந்த பணம்: ஏற்க மறுத்த ஆலப்புழா மாவட்ட நிர்வாகம்

ஆலப்புழா: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் தந்த ரயில் டிக்கெட் கட்டணமான ரூ.10 லட்சத்தை கேரளாவின் ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்று அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்து இருந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் இந்த தொகையை வழங்கியதாக ஆலப்புழா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜு தெரிவித்தார். அந்த தொகையை செலுத்த ஏற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

ஆயினும் காங்கிரஸ் கமிட்டியின் இந்த பணத்தை ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது. இன்று ஆலப்புழாவில் இருந்து பீகாரில் உள்ள பெட்டியா வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்கான கட்டணமாக ஆலப்புழா மாவட்ட நிர்வாகத்திற்கு, காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகம் வழங்கியது.

ஒரு பயணியின் டிக்கெட் கட்டணம் ரூ.930 ஆகும்.  இது மாவட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும்  எந்த அரசியல் கட்சிகளிடமிருந்தும் ரயில் டிக்கெட் கட்டணமாக பணத்தை பெற எந்தவொரு அரசாங்க உத்தரவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.