சர்ச்சைக்குள்ளான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்

டில்லி:

ர்ச்சைக்குள்ளான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு  ஒத்தி வைக்கப்படுவதாக  சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம்  நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு வரும் 22ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்தியாலயா, நவோதயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை, மத்திய  ஆசிரியர் தேர்வு (சி.டி.இ.டி.) மூலம் சிபிஎஸ்இ தேர்வு செய்து வருகிறது.

இந்த தேர்வு  இதுவரை மாநில மொழிகளிளும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு  ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுத வேண்டும் என சிபிஎஸ்இ அறிவித்தது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், தமிழ் உள்பட 20 மாநில மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் எனவும்,  மாநில மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

சி.டி.இ.டி. தேர்வை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததால், கால அவகாசம் கருதி சில மொழிகளை நீக்க சி.பி.எஸ்.இ. முடிவு எடுத்தது. ஆனால் இதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளேன். எனவே முன்பு இருந்தது போல 20 மொழிகளிலும் அந்த தேர்வு நடத்தப்படும்’ என்றும் இது குறித்த புதிய உத்தரவை சி.பி.எஸ்.இ. விரைவில் வெளியிடும் என்று கூறிய ஜவடேகர், இதில் எந்த குழப்பமும் தேவையில்லை என்றும்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பப்பதிவு ஒத்திவைக்கப்படுகிறது, தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.