முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து: ‘சபரிமலை’ ரஹானா பாத்திமா கைது  

எர்ணாகுளம்:

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய ரஹானா பாத்திமா, தனது பேஸ்புக் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட தற்காக கைது செய்யப்பட்டார்.

ரஹானா பாத்திமா

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, இளம்பெண்கள் சிலர் சபரி மலைக்கு வர முற்பட்டனர்.

இதற்கு அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால்,  எதிர்ப்பையும் மீறி பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும், ரஹானா பாத்திமா என்ற இஸ்லாமிய பெண்ணும்,  காவல்துறை பாதுகாப்புடன் சன்னிதானம் பகுதிவரை வந்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சன்னிதானம் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து உள்ளே நுழைய அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து,  இரண்டு பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டாம் என திருவாங் கூர் தேவசம் போர்டு உத்தரவிடடதை தொடர்ந்து, அவர்கள் 2 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.  ரஹானா பாத்திமா போராட்ட எண்ணமுடையவர், இது லட்சக்கணக்ககான பக்தர்களின் உணர்வை  பாதிக்கும் என்று மறுக்கப்பட்டதாக கேரள அமைச்சர் கடக்கம் பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரஹானா பாத்திமாக  தனது பேஸ்புக் பக்கத்தில், மத உணர்வுகளை புண் படுத்தும் விதமாக புகைப்படத்துடன  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது சர்சையை ஏற்படுத்தியது.  இதனையடுத்து அவரை பத்தினம்திட்டா போலீசார் கைது செய்தனர்.