சஞ்சய்காந்தி குறித்து சர்ச்சை: ‘இந்து சர்கார்’ இன்று நாடு முழுவதும் வெளியீடு!

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்தியாகாந்தியின் இளைய மகன் சஞ்சய்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை படத்தில் கூறியுள்ளதாக, எதிர்ப்பு கிளப்பப்பட்ட இந்து சர்க்கார் என்ற திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியாகிறது.

சர்ச்சைக்குரிய ஹிந்தி திரைப்படம் இந்து சர்கார் இன்று நாடு முழுவதும் திரையிடப்படுகிறது.

1975 – 77ம் ஆண்டின்போது இந்தியா காந்தி, இந்தியாவின் பிரதமராக இருந்தார். அப்போது, நாடு  நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அந்த நேரத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்தியில் ‘இந்து சர்கார்’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்கக் கோரியும்,  சஞ்சய் காந்தியின் மகள் எனக்கூறி வரும் பிரியா சிங் பால், உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்ர, தனது தந்தை சஞ்சய் காந்தியை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான சம்பவங்களை புகுத்தி இருப்பதாகவும்  குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய ‘இந்து சர்கார்’ என்ற அந்த திரைப்படம்  இன்று நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.