பாஜக மாணவர் அமைப்பு வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாசப் படமா ?

டோதரா

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ பி வி பி வாட்ஸ்அப் குழுவில் ஆபாச படங்கள் பகிரப்பட்டதாக எழுந்த தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷன் என்னும் மாணவர் அமைப்பு பாஜகவின் சார்பு மாணவர் அமைப்பு ஆகும்.   குஜராத் மாநிலம் வடோதராவில் எம் எஸ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்  தேர்தல் நடைபெற்றது.   அதை ஒட்டி இந்த மாணவர் அமைப்பு தங்கள் உறுப்பினர்களுக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கியது.

இதில் வடோதரா நகரின் ஏ பி வி பி அமைப்பின் பொறுப்பாளர்கள் அட்மினாக இருந்தனர்.   இந்த குழுவில் ஆபாசப் படங்கள் பகிரப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.   இது குறித்து சில மாணவர்கள் அளித்த சமூக தள பதிவுகளில் இந்த பகிர்வுகளின் ஸ்கிரின் ஷாட் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில், “ஏ பி வி பி அமைப்பு தங்களை தேசியவதிகள் எனவும் பெண்களுக்கு காவலர்கள் எனவும் கூறிக் கொள்கிறது.   ஆனால் அந்த அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாசப்படங்கள் பகிரப்பட்டது மிகவும் அவமானகரமானது.  அவர்கள் நோக்கம் தவறானது என மக்களுக்கு இப்போது விளங்கி விட்டது” என குறிப்பிடப்படுள்ளது.

இதற்கு ஏபிவிபி யின் வடோதரா நகர செயலாளர், முஞ்ஜல் சோனி, “இது தவறான தகவல்.   தற்போதுள்ள தொழில் நுட்பத்தின் படி யாரும் எந்த பெயரிலும் ஒரு வாட்ஸ்அப் குழு அமைக்கலாம்.   இவர்கள் குறிப்பிட்ட அந்த குழுவை எந்த ஒரு பொறுப்பாளரும் அமைக்கவில்லை.    அத்துடன் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் ஆபாசப் படங்களை அனுப்பும் அளவுக்கு கீழ்தரமானவர்கள் இல்லை.

இது வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்ட தவறான தகவல்.   இந்த குழு ஏபிவிபி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு எங்களுக்கு எதிராக நடத்தப்படும் குழு.   அரசு இதில் தலையிட்டு இந்த இயக்கத்தின் நற்பெயரை கெடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.