மகாபாரத கருத்து சர்ச்சை: கமலுக்கு, மகள் அப்சரா ஆதரவு

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், மகாபாரத்தைத  இழிவு படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. கமல் மீது சென்னை, குடந்தை, நெல்லை உட்பட சில நகரங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கமல் பேச்சு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கமல் மகள் அக்‌ஷரா ஹாசன், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தற்போது ஒரு இந்திப் படத்தில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பாகிவிடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.

அப்பா நடிப்பில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்து வருகிறார். அதுபோல் நானும் அப்பாவுடன் சேர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். வாய்ப்பு அமைந்தால், நாங்கள் மூவரும்  ஒரே படத்தில் சேர்ந்து  நடிப்போம்” என்றார்

கமல் – மகாபாரத சர்ச்சை குறித்தும் பேசிய அவர், “அப்பா, எந்த ஒரு விசயத்தையும் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். கடந்த காலங்களில்  இதுபோல் அவர் பலமுறை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்” என்று அக்‌ஷரா ஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.