போலீஸ் வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சிந்தியாவுக்கு சிக்கல்..

போலீஸ் வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சிந்தியாவுக்கு சிக்கல்..

பா.ஜ.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான மாதவராவ் சிந்தியா அண்மையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொரினா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மத்தியபிரதேச மாநில போலீசுக்குச் சொந்தமான வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

இதனை மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் பிரமோத் சுக்லாவின் கவனத்துக்குக் கொண்டு சென்ற கோகலே என்பவர், போலீஸ் வாகனத்தில் சிந்தியா செல்லும் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

இதையடுத்து மத்தியப்பிரதேச மாநில உள்துறை செயலாளருக்கு, தேர்தல் அதிகாரி சுக்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மூன்று தினங்களில் அறிக்கை தரும்படி அந்த நோட்டீசில் , சுக்லா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மாதவராவ் சிந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து சிந்தியா விலகி, பா.ஜ,க. வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.