சிவாஜி மன்னரின் பெயருக்கு அவமரியாதையா? சோனி டிவி-யின் KBC நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

மும்பை: சத்ரபதி சிவாஜி மகாராஜாவைப் பற்றிய குறிப்பைக் கொண்டிருந்த சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி (கேபிசி) என்ற வினாடி-வினா நிகழ்ச்சியில் ஒரு கேள்வி சர்ச்சையைத் தூண்டியதுடன், 17 ஆம் நூற்றாண்டின் மராட்டிய வீரருக்கு “அவமரியாதை“ செய்தது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி மகாராஜுக்கு “அவமரியாதை” செய்ததற்காக பொழுதுபோக்கு நிறுவனமான சோனி டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே வெள்ளிக்கிழமை கோரினார்.

சிவாஜி மகாராஜை முதல் நபர் ஒருமையில் குறிப்பிடுவதன் மூலம் அவர் பெயரை அவமதித்ததாக ரானே கூறினார். அவர்கள் மன்னிப்புக் கோருவதை தாமதப்படுத்தினால் இந்நிகழ்ச்சியைத் தொடர எந்தவொரு லைஃப் லைனும் இருக்காது என்று எச்சரிக்கை செய்தார்.

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முக்கிய பகுதிகளை ஆட்சி செய்த முகலாய பேரரசரான அவுரங்கசீப்பின் சமகாலத்தவர்கள் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டபோது இந்த சர்ச்சை வெடித்தது.

நான்கு விருப்பத் தெரிவுகளில், சத்ரபதி சிவாஜியை “சிவாஜி” என்று குறிப்பிடப்பட்டார், மற்ற விருப்பத்தெரிவுகள் மகாராணா பிரதாப், ராணா சங்கா மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங் என்றிருந்தன.

அத்தகைய அடைமொழியற்ற பெயர்க் குறிப்பிடலைக் கண்டு துணுக்குற்ற பலர் சமூக ஊடகங்களில் சோனி டிவி யை விமர்சித்ததோடு இல்லாமல் அந்நிறுவனம் மன்னிப்பு கோரவும் வேண்டினர்.