சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்மையில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு இந்து பெண்கள்குறித்து அவதூறாக  பேட்டி அளித்திருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீஸார்  6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

யுடியூப் சேனல் ஒன்றுக்குபேட்டியளித்த திருமாவளவன்,  பெண்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.  சனாதன தர்மத்தில் பெண்கள் பரத்தையர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திருமாவளவனின் பேச்சை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் போராட்டமும் நடைபெற்ற வருகிறது. இதற்கு இதையடுத்து திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன்  புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில  மத ரீதியாக பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டுதல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டும் என்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை பேசி வேண்டும் என்ேற மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்துதல் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுதல் ஆகியவை திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நடத்துபவர்கள் செய்து வருகின்றனர்.

திருமாவளவன் என்ற நபர், “இந்து பெண்கள் அனைவருமே விபசாரிகள் தான்” என்று கொச்சையாக பேசியுள்ளார். மேலும் இந்து சாஸ்திரங்களில் இதுபோன்று இருப்பதாக ஒரு பொய்யான, அவதூறான கருத்தை பதிவிட்டுள்ளார். இது ேவண்டும் என்ேற ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும் மதரீதியான பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து பெண்களை கொச்சைப்படுத்தி அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை கொச்சைப்படுத்தும் ேநாக்கில் பேசியுள்ளார். எனவே திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நிர்வகிப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதையடுத்து,  மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பெரியார் யூ-டியூப் சேனல் நிர்வாகிகள் மீது ஐபிசி 153, 153ஏ(1)(ஏ), 295ஏ, 298, 505(1)(பி), 505(2) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் பாஜவினர் அளித்த புகாரின்படி திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.