டில்லி

ட்டுமானப் பொருட்களின் ஜி எஸ் டி குறைக்கப்பட்டு 5% வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாத்ம் 1 முதல் ஜி எஸ் டி அமலாக்கப்பட்டுள்ளது. இதில் பல பொருட்கள் 28% வரி விதிப்பில் இருந்து வந்தது. தற்போது அந்த வரி விகிதங்கள் மாற்றப்பட்டு பல பொருட்கள் குறைந்த வரி விகிதத்துக்கு மாற்றப்பட்டது. ஆயினும் கட்டுமானப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துளனர்.

இன்று ஏ என் ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி, “மத்திய அராசு கட்டுமான பொருட்களின் வரியை குறைத்து அவைகளை 5% வரிவிதிப்பின் கீழ் கொடு வர திட்டமிட்டுள்ளது. ஆயினும் அவ்வாறு கொண்டு வர ஒரு சில தடைகள் உள்ளன. அதனால் அந்த திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. ஜிஎஸ் குழுவுக்கு இந்த தகவல் அனுப்பட்டுள்ளது.

விரைவில் ஜி எஸ் டி குழு பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டுமான பொருட்களை 5% வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரும். ஜிஎஸ்டி நடைமுறை பயனாளிகள் நலனுக்காகவே உருவாக்கப்பட்டவைகள் ஆகும். இத்தனை சிறிய காலத்தில் எவ்வளவு சாதித்தாலும் இத்தனை பெரிய நாட்டில் அது சிறிதாகவே தெரியும். அது மட்டுமின்றி இதற்கான கால அவகாசமும் தேவைப்படுகிறது. ஜிஎஸ்டியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளோம்.” என தெரிவித்துளார்.