சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு!

டில்லி,

மானியம் மற்றும் மானியம்  அல்லாத வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ்  சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.93.50 அதிகரித்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு பதவிக்கு வந்ததுமுதல் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை முழு தொகை கொடுத்தும் வாங்குவதும், அதற்கான மானியம்  வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மானியம் அல்லாத வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் இன்று முதல் ரூ.750 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.93.50 அதிகரித்துள்ளது.

அதே சமயம் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை (மானியம் கழித்து) ரூ.479.11-ல் இருந்து ரூ.483.69 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ரூ.4.58 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.