கூல் கேப்டன் எப்பொழுதும் கூலாக இருக்க மாட்டார் – பரத் சுந்தரேசன்

கூல் கேப்டன் தோனி அவ்வளவு கூல் ஆளான மனிதர் அல்ல என்பதை பரத் சுந்தரேசன் தனது புதிய புத்தகமான ” தி தோனி டச் “ என்பதில் விவரித்துள்ளார். தோனி சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை பரத் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

Dhoni

பரத் சுந்தரேசன் தனது புத்தகத்தில் தோனியை பற்றி குறிப்பிட்டுள்ள சில தகவலகள்:

2008ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் ஒரு நாள் தொடரில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 159 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் சுருண்டது. 160 ரன்கள் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய இந்தியா 150 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களத்தில் இருந்த படி தோனி கிளவ் வேண்டும் என்று சைகை செய்தார்.

அவரது சைகை கிளவுக்காக மட்டுமில்லை, மாறாக சக போட்டியாளர்கள் வெற்றியை பால்கனியில் இருந்து கட்டுமிராண்டித்தனமாக கொண்டாட வேண்டாம் என்பதை குறிப்பிடும் படியாக இருந்ததாக பரத் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் போட்டி முடிந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கைக் கொடுக்கும் போது அவர்களின் கண்களை நேருக்குக் நேர் பார்த்து கம்பீரமாக கைக்குளுக்க வேண்டும் என்று தோனி சக வீரரான ரோஹித் சர்மாவுக்கு அறிவுறுத்தினார்.

ஏனெனில் நாம் அதிகப்படியாக இந்த வெற்றியைக் கொண்டாடினால் அவர்கள் ஏதோ இந்தப் போட்டியில் ஏமாற்றமாக தோல்வி அடைந்து விட்டது போல் காட்டிக் கொள்வார்கள். இது தொடர்ச்சியாக நடக்க வேண்டும், நடக்கும் என்பதை அறிவுறுத்துவதாக கைகுலுக்கல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதே தோனியின் கருத்தாக இருந்துள்ளது. அதாவது நாங்கள் ஏதோ அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறவில்லை, இதனை தொடர்ந்து உங்களுக்குச் செய்வோம் என்பதாக கைகுலுக்கல் மூலம் நிரூபிக்க வேண்டும் என்பது தான் தோனியின் தனிப்பாணி என்று விவரிக்கிறார் பரத் சுந்தரேசன்.

எதிரணியினர் தங்கள் சகோதரி அல்லது தாயை வசைப்பாடினால் அவர்களை போல நீங்களும் அவர்களின் உறவினர்களை வசைப்பாட கூடாது என்பதை வீரர்களுக்கு அறிவுறுத்தியது, தோனியும் உறுதியாக அதனை கடைப்பிடித்தார். ஒருவர் நம்மை இழிவுப்படுத்தினால் அவர் பாணியில் சென்று நாமும் பதிலளிக்க கூடாது. மாறாக, நமக்கே உள்ள தனி பாணியில் பதிலளிக்க வேண்டும் என்று தோனி கூறிவந்துள்ளதாக பரத் நினைவு கூர்ந்துள்ளார்.

மோதலே கூடாது என்பது தோனியின் கொள்கை இல்லை, வீரர்கள் அதில் ஈடுபடும் போது அவர் தடுப்பதும் இல்லை, ஆனால் தனிமனிதத் தாக்குதல் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பானவராக தோனி இருந்துள்ளார்.

களத்தில் எதிரணியுடன் ரத்தம் சிந்தாமல் போரிட்டு கோப்பையை வெற்றிக்கொள்வது தோனியின் தனித்தன்மை என பரத் சுந்தரேசன் தனது புத்தகத்தில் புகழ்ந்துள்ளார்.