Random image

விபத்தில் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த காவலர் சஸ்பெண்டு!

கர்னால்:

விபத்தில் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி காவலர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அரியானா மாநிலத்தில்  கர்ணால் மாவட்டத்தில்  விபத்தில் காயமந்த வர்களை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல், அதற்கு பதிலாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அந்த காவலரை இடைநீக்கம்   செய்து  உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கர்னால் இந்ரி மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், காயமடைந்தவர்களை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல்,வேறொரு தனியார் மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து, காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ரம்பா காவல்நிலைய போலீஸ்காரர் ஜக்பீர் சிங் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

தனியார் மருத்துவமனைக்கும் காவலருக்கும் இடையே உள்ள நெருக்கம் காரணமாக, விபத்தில் காயமடைந்தவர்களிடம் அதிக பணம் வசூலிக்கும் நோக்கிலேயே தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவ தாகவும் கர்னல் பொலீஸ் அதிகாரி சுரேந்தர் சிங் போரியா தெரிவித்துள்ளார்.