9d695e2b-3d99-4e2e-8364-ede2113fbf66_82401_CUSTOMஇந்த வருடம் கோப அமெரிக்க போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது இது 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி ஆனால் 1916 முதல் 1967 வரை அதன் தென் அமெரிக்க நாடுகளின் இடையே விளையாடி வருகிறது. 1975 ல் இருந்து இந்த ஆண்டு வரை கோபா அமெரிக்கா கோப்பை வட மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் நாடுகள் இடையே விளையாடி வருகிறது.
குரூப் போட்டிகளில் பிரேசில் மற்றும் உருகுவே கால் இறுதி போட்டிக்கு தகுதி பெறத் தவறியது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்படுத்தியது. கால் இறுதி போட்டிகள் நாளை முதல் நடைபெறுகிறது. முதல் போட்டி அமெரிக்கா – எக்குவடோர். அதற்கு பின்பு ரசிகர்கள் எதிர் பார்க்கும் அர்ஜென்டீனா – வெனிசூலா போட்டி நடைபெறுகிறது. பெரு – கொலம்பியா மற்றும் சிலி – மெக்ஸிக்கோ மோதும் போட்டிகள் நடைபெறுகிறது.
அமெரிக்கா  வெற்றி
இந்நிலையில் காலிறுதி சுற்று இன்று தொடங்குகிறது. சியாட்டில் நகரில் நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா – ஈக்வேடார் அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது லீக் சுற்றில் வலுவான் அணிகளுடன் மோதி இந்த காலிறுதி சூற்றுக்கு வந்துள்ளது. ஆரம்பம் முதல் இரு அணிகளும் கடுமையாக விளையாட போட்டி ரசிகர்கள் உற்சாகமாக பார்த்தனர். அமெரிக்கா 22வது மற்றும் 52வது நிமிடம் டெம்ப்சே கோல் மூலம் 2-0 என்ற கோல் மூலம் அமரிக்கா முன்னரியது.  ஈக்வேடார் கடும் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இறுதில் அமெரிக்கா 2-1 என்ற கோல்  கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அமெரிக்கா அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
17USSOCCER-master768