Random image

பாதி எரிந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறை

கல்பா, அரியானா

கௌரவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும்  புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாதி எரிந்த ஒரு பெண்ணின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் மேகாம் நகருக்கு மிக அருகில் உள்ள ஒரு சிற்றூர் பகல்பா.   இங்கு வசிக்கும் ஒரு பதினோராம் வகுப்பு மாணவி திடீரென மரணம் அடைந்தார்.    அந்தப் பெண்ணின்  குடும்பத்தினர் அவருடைய சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்தனர்.   அனைவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.

பகல்புரா காவல்நிலையத்துக்கு அந்தப் பெண் கௌரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் குடும்பத்தினர் அவசரமாக தகனம் செய்ய உள்ளதாகவும் புகார் வந்தது.   அதை ஒட்டி காவல்துறையினர் விரைந்து சென்று அந்த பெண்ணின் சடலத்தை பாதிஎரிந்த நிலையில் கைப்பற்றி உள்ளனர்.   அந்த சடலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிணத்தை கைப்பற்ற சென்ற காவல்துறையினருக்க்கும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.   அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மிகவும் சீர் கெட்டதால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவு வரும் வரை இது குறித்து எதுவும் சொல்ல முடியாது எனகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்