Random image

சீனாவில் உருவாக்கப்பட்ட முதல் குளோனிங் பூனைக்குட்டி ‘கார்லிக்’ – வீடியோ

சீனா முதன்முதலாக பூனைக்குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கி உள்ளது. பார்ப்பதற்கும் அழகாகவும், எழில்மிகு  கலரில் காணப்படும் அந்த பூனைக்குட்டியின் சேஷ்டைகள் பார்ப்போரை பரவசமடையச் செய்கிறது… இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த குறித்து கூறிய பூனைக்குட்டியின் உரிமையாளர், அசல் பூனையைப் போலவே குளோனிங் பூனைக்குட்டி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஹுவாங் யூ வளர்த்து வந்த கார்லிக் எனப்படும் செல்லப் பூனை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டது. இதையடுத்து, அதுபோல குளோனிங் முறையில் பூனையை உருவாக்க ஆசைப்பட்டு, அதற்கான ஆராய்ச்சி நிறுவனத்தை நாடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சீனாவின் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சினோஜின் ( Sinogene) நிறுவனம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. கார்லிங் இறந்து 7 மாதங்களுக்குப் பிறகு, குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட புதிய கார்லிக் பூனை  கடந்த ஜூலை 21ந்தேதி வெளி உலகத்துக்கு வந்தது.

இந்த பூனைக்குட்டியின் உரிமையாளரான ஹுவாங் யூவுக்கு வயது 23 மட்டுமே. இதுகுறித்து கூறிய ஹுவாங்  “கார்லிக் இறந்தபோது, ​​நான் மிகவும் சோகமாக இருந்தேன், “இது ஒரு திடீர் மரணம் என்பதால் என்னால் உண்மைகளை எதிர்கொள்ள முடியவில்லை என்றும்,  தன் இழப்பை ஈடுகட்ட குளோனிங் முறையில் பூனைக்குட்டியை உருவாக்க ஆசைப்பட்டதாகவும், தற்போது, கார்லிக் பூனையின் மறு அவதாரத்தைப் பார்க்கும்போது தனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே இருந்த கார்லிக் பூனைக்கும், தற்போது குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள குட்டி கார்லிக் பூனைகளுக்கும் இடையேயான ஒற்றுமை 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது” என்று கூறினார். இந்த கார்லிக் காப்பி கேட், பழைய பூனையைப் போலவே  வெள்ளை மற்றும் சாம்பல்  கலரில் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

குளோனிங் முறையில் இதுபோன்ற வளர்ப்பு பிரானிகளை உருவாக்கி வரு•ம் சினோஜின் ( Sinogene) நிறுவனம்  ஏற்கனவே இதுபோன்ற 40க்கும் மேற்பட்ட  அழகான நாய்க்குட்டிகளை குளோனிங் முறையில் உருவாக்கி உள்ள நிலையில், தற்போதுதான் முதன்முறையாக பூனைக்குட்டியை உருவாக்கி உள்ளது.

இந்த பூனைக்குட்டியை உருவாக்க ரூ 250,000 யுவான் ($ 35,000) செலவு ஆவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள அந்த நிறுவனத்தின் தலைமை  நிர்வாக அதிகாரி மி ஜிடோங், இந்த விலை அதிகமாக இருந்தபோதிலும், இதுபோன்ற குளோனிங் தேவையை நாடுபவர்கள் அனைவரும்,  அதிக வருமானம் ஈட்டக்கூடியவர்கள்  என்று தெரிவித்துள்ளவர், படித்து பட்டம் பெற்ற இளைஞர்களும் இதில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்று கூறி உள்ளார்.

“செல்லப்பிராணிகளின் தோற்றம் எதுவாக இருந்தாலும், உரிமையாளர்கள் அவற்றை குடும்பத் தின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். அதன் காரணமாகவே, செல்லப்பிராணி குளோனிங் இளம் தலைமுறையினரின் ஆர்வத்தை தூண்டுகிறது, உணர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

சீனாவில் வளர்ந்து வரும் செல்லப்பிராணி சந்தை மற்றும் செலவினங்களுக்காக அவற்றின் உரிமையாளர்களிடையே பெரும் பசி உள்ள நிலையில், செல்லப்பிராணி குளோனிங்கிற்கான சந்தையும் ராக்கெட் வேகத்தில் செல்வாகவும் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் விஞ்ஞானிகள் தங்கள் அடுத்த குளோனிங் சவாலுக்கு பெரிய அபிலாஷைகளைக் கொண்டுள்ளனர், பூனைகளை குளோன் செய்ய முடிந்தால், பாண்டாக்களும் முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.

20 ஆண்டுகளாக மாபெரும் பாண்டா குளோனிங்கை ஆராய்ச்சி செய்து வரும் சீன அறிவியல் அகாடமியின் நிபுணர் சென் தயுவான், பூனைகள் குளோன் செய்யப்பட்ட குழந்தை பாண்டாக்களைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் கூட இருக்கக்கூடும் என்று கூறினார், அவை பூனைகளை விட சிறியதாக இருந்தாலும் அவை முழுமையாக இருக்கும்போது வளர்க்கப்படு கிறது.

செல்லப்பிராணி குளோனிங் பல நாடுகளில் சட்டவிரோதமானது, ஆனால் தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டது, பாடகர் பார்பரா ஸ்ட்ரைசாண்ட் கடந்த ஆண்டு தனது நாயை குளோன் செய்ததாக அறிவித்தார்.

விலங்கு குளோனிங்கில் முதல் பெரிய வெற்றி டோலி செம்மறி, 1996 இல் பிரிட்டனில் பிறந்தது. இதுதான் குளோன் செய்யப்பட்ட முதல் பாலூட்டி விலங்கினம்..

2005 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் ஆராய்ச்சியாளர்கள் முதல் நாயை குளோன் செய்தனர். சியோலில் உள்ள சூம் பயோடெக் ஆராய்ச்சி அறக்கட்டளை, சுமார் 800 செல்லப்பிராணிகளை குளோன் செய்து தலா 100,000 டாலர் வசூலிப்பதாகக் கூறுகிறது.

Video Courtesy: AFP