கொரோனா: தமிழகத்தில் இன்று புதிதாக 5,569 பேர் பாதிப்பு, 66 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும்,  5,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் மேலும்  66 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறைஅறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  5,36,477 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 987 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மீதமுள்ளவர்கள் மற்ற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்கள், நாடுகளை சேர்ந்தவர்கள்.

இன்று மட்டும் 5,556 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று ஒரே நாளில் 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துளளனர்.