புதுடெல்லி:

கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தி வீழ்ச்சியால், 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் கடந்த பிப்ரவரியில் 2.1 சதவீதம் குறைந்துள்ளது.


நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு,சுத்திகரிப்பு பொருட்கள்,உரம், இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளில் கடந்த 2018- ஆண்டு பிப்ரவரியில் வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக இருந்தது.

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் வளர்ச்சி முறையே 6.1 சதவீதம் மற்றும் 0.8 சதவீதமாக இருந்தது.

2019-ம் ஆண்டு பிப்ரவரியில் உரம் உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவீதமாகவும், இரும்பு உற்பத்தி 4.9 சதவீதமாகவும்,சிமெண்ட் உற்பத்தி 8 சதவீதமாகவும், மின்துறையின் வளர்ச்சி 0.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

எனினும் நிலக்கரி உற்பத்தி 7.3 சதவீதமாகவும் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி 3.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சக தரவுகளின் அடிப்படையில், 2018-19 ஆண்டு காலத்தில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 8 துறைகளின் 4.3 சதவீதம் சமநிலையாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.