தமிழகம் : மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பால் மொத்த எண்ணிக்கை 124 ஆகியது

சென்னை

மேலும் 50 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது

இந்தியா முழுவதும் இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1401 ஆகி உள்ளது.

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஐ எட்டி உள்ளது.

டில்லியில் இருந்து வந்தவர்களில் 45 பேருக்கு கொரோனா உள்ளது உறுதி ஆகி உள்ளது

இந்த தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி